Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“SCHOOL-க்கு போக சொல்றாங்க” மாணவி எடுத்த விபரீத முடிவு…. சேலத்தில் பரபரப்பு…!!

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் எலக்ட்ரீசியனான வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிந்துஜா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சிந்துஜா பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் காலை பள்ளிக்கு புறப்பட்டு செல்லுமாறு சிந்துஜாவின் பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சிந்துஜா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை அடுத்து மகள் நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது சிந்துஜா தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |