Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“SCHOOL-க்கு போக மாட்டோம்” இடிந்து விழும் நிலையில் கட்டிடம்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

புதிதாக கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புலிமான்குளத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. சுமார் மூன்று தலைமுறையினர் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கட்டிடத்தின் மேல் கூரை ஓடுகள் உடைந்ததால் பழுதான கட்டிடம் எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது. மேலும் மேற்கூரை ஓடுகள் உடைந்ததால் சூரிய ஒளி வகுப்பறைக்குள் விழுகிறது.

எனவே புதிதாக கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பள்ளி மாணவர்கள் கடந்த 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கு செல்லாமல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

Categories

Tech |