கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பல்வேறு துறைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டதை போல், பள்ளி கல்லூரி தொடங்க அனுமதி அளிக்குமாறு தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழக அரசு தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் எழுத்துப்பூர்வமான விருப்பத்தை அதிகாரிகளுக்கு அளித்து ஒப்புதல் பெறாத வரை தங்கள் பள்ளிகளை திறக்க கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது. பெற்றோரின் சம்மதம் இருந்தால் மட்டுமே மாணவர்களை அழைக்க வேண்டும். வீட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு தக்க முறையில் திட்டமிட வேண்டும் என கூறியுள்ளது.