தமிழகத்தில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தோட்டக்கலைத்துறை புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது 100% மானியத்தில் பழங்கள் மற்றும் காய்கறி தோட்டம் அமைத்து தரப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மாணவர்களிடையே பழங்கள், காய்கறிகள், மூலிகைச் செடி ஆகியவற்றை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.