Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகள் திறப்பு: சற்று நேரத்தில் முதல்வர் அறிவிப்பு..!!

கொரோனா பெருந் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பள்ளி – கல்லூரிகள் அடைக்கப்பட்டன. தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில், பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கான ஆலோசனையை மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. தமிழகத்திலும் கூட இதற்கான அறிவிப்பை வெளியிடபட்டு இருக்கின்றது. தமிழகத்தில் நாளை முதல் புதிய ஊரடங்கு தளர்வு அமலாக இருக்கின்றது.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு டன் டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பள்ளி – கல்லூரி திறப்பு, மெரினா கடற்கரை திறப்பு, மத அரசியல் கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பை வெளியிட உள்ளார். இதற்கிடையில் மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகரணை, துறைபாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளை முதல்வர் ஆய்வு செய்கிறார்.

Categories

Tech |