தாய் கண்முன்னே மகன் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கே.கே நகர் இரட்டை டேங்க் 2-வது குறுக்கு தெருவில் ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தனுஷ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தனுஷ் தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் உறவினரை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் புழல்-தாம்பரம் பைபாஸ் சாலையில் கதிர்வேடு என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது தனுஷ்வரனின் மோட்டார் சைக்கிள் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த தனுஷ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன்பின் படுகாயமடைந்த தேவியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனுஷ்வரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.