விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தாயின் சேலை இறுக்கி சிறுவன் மரணம் அடைந்தான்.
நாகர்கோவில் கோட்டாறு சவேரியார் ஆலயம் அருகே இருக்கும் முதலியார் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ் அண்டோவிஜி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 12 வயதில் ஆண்டோசப்ரின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். விளையாட்டு மற்றும் படிப்பில் படு சுட்டியாக இருந்த ஆண்டோசப்ரின் நேற்று விடுமுறை காரணமாக வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.
தனது தாயின் சேலையை வீட்டில் இருந்த மின்விசிறியில் போட்டு விளையாடிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக ஆண்டோசப்ரின் கழுத்தை இறுக்கி உள்ளது. இதனால் ஆண்டோசப்ரின் சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு விரைந்து வந்த பெற்றோர் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மகனின் உடலை கண்டு பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.