நண்பர்களுடன் குளிக்கச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் குளம் என்ற பகுதியில் வசித்து வருபவர் தட்சிணாமூர்த்தி. இவருக்கு சந்தோஷ் என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளான். இந்நிலையில் கிருஷ்ணா கால்வாய்க்கு சந்தோஷ் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். சந்தோஷ் குளித்து கொண்டிருக்கும் போது திடீரென நீரால் அடித்துச் செல்லப்பட்டார்.
இந்நிகழ்வை கரையிலிருந்து கண்டவர்கள் நீரில் குதித்து சந்தோஷை மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் சந்தோஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.