Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது தெரிஞ்சா என்ன ஆகும்… திடீரென மாயமான சிறுவன்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தந்தையின் ஸ்கூட்டருடன் மாயமான சிறுவனை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாடு கண்டனூர் பகுதியில் பாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டாசு மற்றும் ஹார்டுவேர் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு சூரிய பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சிறுவன் தந்தையின் ஸ்கூட்டருடன் மாயமானதால் பாலன் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன சிறுவனை தாடிக்கொம்பு பகுதியில் வைத்து மீட்டனர். இதனை அடுத்து அந்த சிறுவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சூரிய பிரகாஷ் தனது தாயின் செல்போனை வைத்து ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடியுள்ளான். இதனை அடுத்து வீடியோ கேம் விளையாடுவதற்காக இந்த சிறுவன் தனது தாயின் வங்கி கணக்கில் இருந்து 25 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து பணத்தை செலுத்தியது பெற்றோருக்கு தெரிந்தால் திட்டி விடுவார்களோ என்ற அச்சத்தில் சிறுவன் வீட்டை விட்டு ஸ்கூட்டர் உடன் வெளியேறியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பிறகு சிறுவன் சூரியபிரகாஷுக்கு காவல்துறையினர் அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |