Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோதிக்கொண்ட பள்ளி மாணவர்கள்…. காய்கறி சந்தையில் பதற்றம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

காய்கறி சந்தையில் வைத்து பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மெயின் ரோட்டில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 1300 -க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் பேருந்து நிலையத்தில் நிற்கும் போது அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தை வளாக பகுதியில் மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது மாணவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்படி கிணத்துக்கடவு காவல்துறையினரும், அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 12 மாணவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அதன் பிறகு மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, பேருந்து நிலையத்தில் நிற்கும் மாணவர்கள் தகராறில் ஈடுபடுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தவறு செய்யும் மாணவர்கள் மீது காவல்துறையினரும், பள்ளி நிர்வாகத்தினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |