மலேசியாவில் 35,000 தகுதி வாய்ந்த பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு RM600 அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,578 சிறப்பு உதவிக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் (MOT) டத்துக் செரி டாக்டர் வீ கா சியோங் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் பள்ளிகளும் மூடப்பட்டன. இதனால் பள்ளிப்பேருந்து ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளான நிலையில் அதற்கு தற்போது வழிகிடைத்திருக்கிறது.
மலேசியாவில் வாடகை வண்டி ஓட்டுநர்களுக்கும் உதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதில், பள்ளிப்பேருந்து ஓட்டுநர்கள் விடுபட்டிருந்தார்கள். இந்நிலையில் தற்போது பள்ளிப்பேருந்து ஓட்டுநர்களுக்கு தலா 600 வெள்ளி உதவித்தொகை வழங்கப்படும் என சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்திருக்கிறார். இதற்காக 21 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
மலேசிய அரசு, சாதாரண மக்களின் பாதிப்பை அறிந்து பல்வேறு கோணங்களில் பல உதவிகள் வழங்கியிருக்கின்றன. இந்நிலையில் இந்த அறிவிப்பு ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.