தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்தார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளி பேருந்து வழக்கம் போல் நேற்று முன்தினம் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு மன்னார்குடி நோக்கி சென்றது. அப்போது ராஜகோபாலபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருக்கிற போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் தாழ்வான இடத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் லேசான காயங்களுடன் தப்பினார்கள். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வைத்த போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என மாணவர்களின் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். பின் அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார்கள்.