Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மாணவர்களின் படிப்பு என்னவாகும்….? ஸ்கூல மூட கூடாது…. பெற்றோர்களின் போராட்டம்…!!

பள்ளி மூடப்படுவதாக நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்ததால் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிளாய் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று கொண்டிருகிறது.. இந்நிலையில் திடீரென இந்த பள்ளியை மூட போவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்ததால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் திடீரென இவ்வாறு பள்ளியை மூடினால் பிள்ளைகளின் படிப்பு கேள்விக்குறியாகி விடும் என பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர்கள் பள்ளி மூடப்படுவது திட்டவட்டமாக உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்ததால், கோபமடைந்த பெற்றோர்கள் ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் சாலையில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து, பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |