Categories
அரசியல்

பள்ளி, கல்லூரி திறப்பு… புறநகர் ரயில், தியேட்டர் இயக்கம்…. இன்று முக்கிய முடிவு …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு தளர்வு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாவட்ட ஆட்சியர்கள் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்துகின்றார்.

எட்டாவது ஊரடங்கு முடிந்து ஒன்பதாவது ஊரடங்கு தளர்வு குறித்த ஒரு ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது. இன்று இரண்டு கூட்டங்கள் நடைபெறுகிறது. காலை நடைபெறக் கூடிய கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர், வருவாய், பேரிடர் மீட்பு துறை அமைச்சர் உதயகுமார், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார். இரண்டாவது கூட்டம் இன்று மாலை 2.30 மணிக்கு தொடங்குகிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மருத்துவர் நிபுணர்களுடன் ஆலோசனை முதலமைச்சர் பழனிசாமி ஆலோசிக்கிறார். இந்த இரண்டு கூட்டங்களின் நோக்கம் என்னவென்றால் எட்டாவது ஊரடங்கு முடிந்து ஒன்பதாவது ஊரடங்கு தளர்வு குறித்த அறிவிப்பு வெளியிடுவது தான்.

அடுத்த மாதம் தீபாவளி மாதம் என்பதால் தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் அதிகமாக பொருட்களை வாங்குவார்கள். ஆகையால் இந்த கொண்டாட்டத்தின் எது போன்ற நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து அந்த விரிவான ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அதேபோல் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது, அதற்கான நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் கேட்க உள்ளார் /

மேலும் கடற்கரை மற்றும் பள்ளி கல்லூரிகள் திறக்காமல் உள்ளது. பள்ளி கல்லூரிகளை திறப்பது  குறித்தும் அந்த ஆலோசனையில் முதலமைச்சர் கேட்கவுள்ளார். அதே போல புறநகர் மின்சார ரயில்களை இயக்குவது, பொழுதுபோக்கு பூங்காக்கள் திறப்பு உள்ளிட்ட முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Categories

Tech |