Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில்…. நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகள்…. பள்ளியின் சிறப்பான செயல்…!!

பள்ளியில் கட்டுரை எழுதுதல்,திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காரத்தொழுவு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 6 முதல் 9-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை எழுதுதல், திருவள்ளுவரின் சிறப்புகள் அடங்கியத் தொகுப்பினைக் கணினியில் உருவாக்குதல், திருவள்ளுவரின் உருவப் படத்தினை வரைதல் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தப் போட்டி 9-ம்வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளியிலும் 6 முதல் 8 -ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் நடத்தப்பட்டுள்ளது. இந்தப்பள்ளியின் தலைமையாசிரியர் சவுந்தரராஜன் தலைமை தாங்க ஆசிரியர்கள் மலர்விழி, ஷாகுல், காளீஸ்வரன், சையது முகமது குலாம் போன்றோர் ஒருங்கிணைத்து நடத்தியுள்ளனர். அதன்பின் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்கள் பரிசுப்பொருளாக வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |