பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே மத மாற்றத்தை ஊக்குவித்த பெண் ஆசிரியை மீது நடவடிக்கை அன்பில் மகேஷ் விளக்கம்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தையல் கலை ஆசிரியராக வேலை பார்த்து வரும் ஒரு ஆசிரியர் தையல் கற்க வரும் மாணவிகளிடம் இந்து மதக் கடவுளை அவதூறாக பேசி கிறிஸ்துவ மத போதனைகளை சொல்லி கட்டாய மத மாற்றத்திற்கு உட்படுத்துவதுமாக இருந்து வந்துள்ளார்.
இது தொடர்பாக மாணவிகள் தங்களது வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் இரணியல் காவல் துறையினரிடம் தகவல் அளித்து அவர்களுடன் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திய போது மாணவிகள் ஆசிரியர் மேல் போட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் பாக்கி விளக்கம் அளித்துள்ளார். அதில் “முதற்கட்டமாக ஆசிரியையிடம் விசாரணை நடத்தப்பட்டு உண்மை தன்மையை ஆராய்ந்து. பின்பு ஆசிரியை மீது துறைவாரி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்காக மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்கு பின் துறைவாரி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.