Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“SCHOOL FIRST” மாணவன் தற்கொலை… மதிப்பெண் குறைந்து விட்டது…. அவசரத்தில் எடுத்த விபரீத முடிவு…!!

பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தான் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இருக்கும் கொட்டாரமடுகு கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவரது மகன் அசோக்குமார் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதில் அசோக்குமார் 600க்கு 481 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால் தான் குறைந்த மதிப்பெண் பெற்று விட்டதாக வருந்திய அசோக்குமார் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அசோக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசோக்குமார் படித்த பள்ளியில் அவர்தான் முதல் மதிப்பெண் எடுத்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |