Categories
தேசிய செய்திகள்

தேர்வு பயத்தில் 12ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..!!

தேர்வு பயத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி அஞ்சனா திங்கள்கிழமை நடக்க இருந்த பன்னிரண்டாம் வகுப்பு கிரேடு தேர்விற்கு ஞாயிறு அன்று இரவு முழுவதும் படித்துக் கொண்டிருந்தார். திங்கள்கிழமை அதிகாலை 5 மணி அளவில் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார் அஞ்சனா. பின்னர் வெகு நேரமாகியும் மகள் வராததால் அவரது தாயாரும் சகோதரியும் அவரை பல இடங்களில் தேடினர்.

எங்கு தேடியும் அஞ்சனா கிடைக்காத நிலையில் வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் பார்த்தபொழுது அஞ்சனம் மிதந்துள்ளார். இதனை கண்டு தாய் மற்றும் சகோதரி அதிர்ச்சியில் கத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அஞ்சனாவின் உடலை வெளியில் எடுத்து பரிசோதித்த போது அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

தேர்வு பயத்தினால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் கூறியுள்ளனர். அஞ்சனாவின் குடும்பத்தினர் கூறுகையில் 5 நாட்களாக யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தாள். என்ன பிரச்சனை எனக் கேட்டும் எந்த பதிலும் கூறவில்லை. தேர்வு பயத்தில் அஞ்சனா தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சி கொடுக்கிறது. அவளது தந்தை துபாயில் பணி புரிந்து வருகிறார்” என கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |