பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஊத்தங்கரை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது மகள் அபிநயா அப்பகுதியில் காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்று வருவதாக கூறிச் சென்றுள்ளார் அபிநயா. மகள் பள்ளிக்கு சென்று விட தாய் கூலி வேலைக்கு சென்றுவிட்டார்.
ஆனால் பள்ளி செல்வதாக கூறி சென்ற அபிநயா பள்ளி செல்லாமல் வீடு திரும்பியுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த அபிநயா திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.