பதினொன்றாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள எட்டிக்கொட்டை பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்துவந்துள்ளார். இவருக்கு சுப்பாத்தாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஹரிணி ஸ்ரீ, கோதைநாயகி என்ற இரு மகள்கள் உள்ளனர். இதில் கோதைநாயகி பதினொன்றாம் வகுப்பும், இரண்டாவது மகள் ஹரிணி ஸ்ரீ ஏழாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஹரிணி ஸ்ரீ ஆடு மேய்க்கவும், அவரது பெற்றோர் வெளியிலும் சென்று விட்டனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த கோதை நாயகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து வீட்டிற்க்கு திரும்பிய பெற்றோர் கோதை நாயகி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆப்பக்கூடல் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆப்பக்கூடல் போலீசார் அந்த மாணவி எதற்க்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.