கொரோனா காலத்தில் உறவினர் வீட்டுக்கு சென்றவர் பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்புத்தூர் வால்பாறை எஸ்டேட்டை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் எஸ்டேட்டில் தங்கி வேலை செய்கிறார். தன் உறவினர் ஒருவரின் மகளோடு இவருக்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது தற்போது இவருக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கொரோனா காலத்தில் வேலை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் புளியங்குடியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
அந்த உறவினரின் மகளுக்கும் பிரேம்குமாருக்கும் இடையே பழக்கமானது. அந்த பெண் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி. பிரேம்குமார் ஆசை வார்த்தைகளை கூறி அந்த மாணவியை பலாத்காரம் செய்திருக்கிறார். இது குறித்து அவர் உறவினருக்கு தெரிய வந்தவுடன் பிரேம்குமார் வால்பாறைக்கு தப்பிச் சென்றார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ப்ரேம் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் சிறை பிடித்தனர்.