Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவளோட சந்தோசமா இருக்க முடியல” அடித்து துன்புறுத்தபட்ட மாணவி… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

பத்தாம் வகுப்பு மாணவியின் தற்கொலைக்கு காரணமான தாயின் இரண்டாவது கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் சரஸ்வதி என்ற பெண் வசித்து வருகின்றார். இந்நிலையில் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த சரஸ்வதி விருகம்பாக்கம் பகுதியில் வசிக்கும் பிரபாகரன் என்பவரை கடந்த 2014ஆம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுடன் சரஸ்வதியின் முதல் கணவர் மூலமாக பிறந்த பத்தாம் வகுப்பு படிக்கும் தீபிகா என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சரஸ்வதி வெளியே சென்ற சமயத்தில் தீபிகா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பின் வீட்டிற்கு வந்து பார்த்த சரஸ்வதி தனது மகள் தூக்கில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரும்பாக்கம் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீபிகாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் சரஸ்வதியின் இரண்டாவது கணவரான பிரபாகரன் என்பவர் தீபிகாவை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த சம்பவம் நடைபெற்ற அன்று பிரபாகரன் தனது மனைவியுடன் சந்தோசமாக இருக்க முடியவில்லை எனவும், தங்களுக்கு இடையூறாக இருப்பதால் எங்காவது சென்று செத்து விடு என்று தீபிகாவை அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த தீபிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பின் பிரபாகரனை கைது செய்து காவல் துறையினர் அவரை சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |