பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் மருதுபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் யாழினி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் யாழினி பள்ளிக்கு சென்று மதிப்பெண் பட்டியலை வாங்கிப் பார்த்த போது அதில் 500க்கு 180 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனை பார்த்ததும் பதினொன்றாம் வகுப்பில் நல்ல குரூப் கிடைக்காது என மன உளைச்சலில் இருந்த யாழினியை அவரது பெற்றோர் சமாதானம் செய்துள்ளனர். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த அந்த மாணவி குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து யாழினி நீண்ட நேரமாக வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது யாழினி சடலமாக தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.