Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மாணவர்களோடு அமர்ந்த அமைச்சர்…. பள்ளியில் தீடீர் ஆய்வு…. ஆசிரியர்களுக்கு அறிவுரை….!!

அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தீடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.  

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி  தமிழக விருந்தினர் மாளிகைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்றுள்ளார். அவரை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் நரேஷ் ஆகியோர்  வரவேற்றுள்ளனர். இந்நிலையில் பள்ளிகல்வித்துறை அமைச்சரும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் திடீரென அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அந்த பள்ளியில் மாணவர்களுக்கு கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் கணினி பயிற்சி கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளார். அதோடு ஊரடங்கு தளர்த்தப்பட்டு தற்போது திறக்கப்பட்டிருக்கும் பள்ளிச் சூழலில் மாணவர்களுக்கு நடத்தப்படும் பாடம் எளிதாக உள்ளதா? புரிகின்றதா? என்பது குறித்து ஆராய்வதற்காக மாணவர்களோடு சேர்ந்து வகுப்பறையில் அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதை அமைச்சர் ஆய்வு செய்துள்ளார்.

மேலும் அமைச்சர் பள்ளி மாணவர்களைப் போலவே உல்லன் ஆடை அணிந்து வகுப்பறையில் அமர்ந்திருந்தது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போது பள்ளிகளில் தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், தொற்று உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அதற்கான மேல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்பின் ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.

Categories

Tech |