கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பள்ளி திறந்த முதல் நாளில் புறப்பட்ட பிளஸ்டூ மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பண்ருட்டி, வி.ஆண்டிக்குப்பம் அழகப்பர் தெருவை சேர்ந்த சிவக்குமார் சென்ட்ரிங் பணியை செய்து வருகிறார். இவரது மகள்கள் கீர்த்தனா மற்றும் சீதா. இவர்கள் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிக்கின்றனர். நேற்று ஒன்றாக சைக்கிளில் கிளம்பியுள்ளனர். ஆனால் கீர்த்தனா பள்ளிக்கு வந்து சேரவில்லை. இதுபற்றி அவரது வகுப்பு ஆசிரியர் வீட்டுக்கு அழைத்து கேட்டுள்ளார்.
வெளியே இருந்த பெற்றோர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது கீர்த்தனா துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனே அவரை இறக்கி பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கண்ட பெற்றோர்கள் கதறி அழுதனர். தற்கொலை செய்து கொண்டதன் காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.