Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பள்ளி திறப்பு முக்கியம் தான்…! ஆனால் அவசரம் வேண்டாம்…. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு …!!

பள்ளிகள் திறப்பது குறித்து எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக முடிவெடுக்க அரசை அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப் பட்டிருப்பதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செங்கல்பட்டு மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க செயலாளர் வித்யாசாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவில், ஊரடங்கால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

இதனால் 22.3% மாணவர்கள் மன அழுத்தம், தூக்கமின்மை, ஆரோக்கியக் குறைவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் 87 சதவீத பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் நடத்தைகள் மற்றும் உணர்வுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே மாணவர்களின் நலன் கருதி, பள்ளிகளில் 50% மாணவர்களுடன் இரு அமர்வுகளாக தலா மூன்று மணி நேர வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த வழக்கானது நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில் நீதிபதிகள் கூறியதாவது, பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும். பள்ளிகளை திறப்பது அவசியம். ஆனால் எச்சரிக்கை முக்கியம்.

எனவே எந்தவித அழுத்தமும் இல்லாமல் அரசு சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும். தற்போது தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. ஆகையால் இன்னும் 8 முதல் 10 வாரங்களில் பள்ளிகள் திறப்பதற்கான முடிவுகளை அரசு எடுக்கும். அப்படி எடுக்காவிட்டால் மனுதாரர் மீண்டும் புதிதாக வழக்கு தொடரலாம் என்று கூறி நீதிபதிகள் தெரிவித்து இவ்வழக்கினை முடித்து வைத்தனர்.

Categories

Tech |