Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாழ்க்கை படத்தை கற்க நாகை மாவட்ட பள்ளி மாணவர்கள் முதல் அடி வைத்துள்ளனர்.

நாகை அருகே மீனவர்களின் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்ளும் முயற்சியாக நடுக்கடலுக்கு மாணவ-மாணவிகள் படகில் சென்றனர்.

பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் வெளி உலகில் நடக்கும் சம்பவங்களை அனுபவரீதியாக தெரிந்து கொள்வதற்காக பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சியை தமிழக பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு கட்டமாக மீனவர்களின் வாழ்க்கையை தெரிந்து கொள்வதற்காக நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மற்றும் கலசம் பாடி ஆகியோர் ஊர்களிலுள்ள இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கடலுக்குள் சென்றனர்.

நடுக்கடலுக்கு சென்ற அவர்களுக்கு கடல் அலைகளும் பயணமும் புதுவித அனுபவத்தை கொடுத்ததாக மகிழ்ச்சியாக தெரிவித்தனர். படகுகள் உருவாக்கும் முறை மீன் பதப்படுத்தும் முறை உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |