தமிழகத்திலுள்ள பள்ளிகளை பொங்கல் விடுமுறைக்கு பின்னர் திறக்க பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது என்பதால் பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து 2 நாட்களாக பெற்றோரிடம் கருத்துக் கேட்கும் கூட்டத்தை நடத்தியது. இந்த சூழலில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நேரடி வகுப்பிற்கு அனுப்ப சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கப் போவதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் முதல்வர் பொங்கல் விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு தேதியை அறிவிப்பார் என தகவல் தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் கடந்த 9 மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்கே செல்லாமல் விட்டில் இருந்து வந்த நிலையில் கருத்து கேட்பு கூட்டத்தில் பெற்றோர்கள் அனைவரும் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப சம்மதம் தெரிவித்ததால் பள்ளி திறக்கும் சுழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர் விடுமுறையை அனுபவித்த மாணவர்களுக்கு சற்று அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.