திட்டமிட்டபடி 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், திட்டமிட்டபடி நாளை 9 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் பிற வகுப்புகளையும் திறப்பது குறித்து ஆலோசனை நடத்திய பிறகு முதலமைச்சர் அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்திய அளவில் பள்ளி கல்வித்துறை 3 வது இடத்தில் இருந்து 1 இடத்திற்கு வந்துள்ளது என தெரிவித்துள்ளார். இந்நிலையில் முழு கட்டணத்தை செலுத்தினால் மட்டும் தான் பொதுத் தேர்வை எழுத முடியும் என தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தினால் பெற்றோர்கள் அது குறித்து புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.