தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக பள்ளிகள் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் பள்ளி கல்வித்துறை பெற்றோருடன் கருத்து கேட்புக்கூட்டம் ஒன்றை நடத்தியது. கூட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நேரடி வகுப்பிற்கு அனுப்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் கிழ்காணும் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென்று இந்த ஆலோசனை கூட்டத்தில் தெரியவந்துள்ளது.
மாணவர்கள் தகுந்த இடைவெளியை விட்டு அமரவேண்டும். ஒரு வகுப்பில் 25 மாணவர்கள் மட்டுமே அமர வேண்டும். அதற்கும் அதிகமான எண்ணிகையில் இருந்தால் அவர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு அமர்த்தப்பட வேண்டும்.
பெற்றோர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி கிடைத்த பின்னரே மாணவர்களை பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும்.
மேலும் பெற்றோர்களின் சம்மதத்துடன் மாணவர்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகளிலும் கற்றுக்கொள்ளலாம். மாணவர்களை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர கட்டாயபடுத்த கூடாது.
தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவுப்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெற்ற பின்னரே பள்ளிகளை திறக்க வேண்டும்.
ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளிகளில் பணி புரிவோர் அனைவரும் பள்ளிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் கட்டாய முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் 9 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறப்பது மாணவர்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் பெற்றோர்கள் அனுமதிக்காமல் மாணவர்கள் பள்ளிகளுக்கு வர கூடாது என்ற உத்தரவு மாணவர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.