Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி…….. தர்மபுரியில் சோகம்….!!

தர்மபுரியில் பள்ளி மாணவி மர்ம காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வீரபுத்திரன் கோவில் தெருவில் லோகநாதன் தேவகி ஆக்கிய தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களது ஒரே மகளான பரணி ஸ்ரீ அதே பகுதியில் உள்ள ஊராட்சி தொடக்க பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரிக்கு திடீரென பயங்கர காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பின் தனியார் மருத்துவமனையிலும், அரசு மருத்துவமனையிலும் அவருக்கு மாற்றி மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

Image result for மர்ம காய்ச்சல்

இதையடுத்து காய்ச்சல் முற்றவே பாப்பிரெட்டி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்றைய முன்தினம் இரவு உயிரிழந்தார். உயிரிழந்த மாணவி உடலைக் கண்டதும் பெற்றோர்கள் கதறி அழுதனர். என்னவென்றே தெரியாத மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |