Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்ன காரணம்….? கிணற்றில் பிணமாக மிதந்த பள்ளி மாணவி…. பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!!!

கிணற்றில் பிணமாக மிதந்த பள்ளி மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கொடுக்கன்குப்பம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கலைச்செல்வன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் இருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று கொடுக்கன்குளம் பகுதியில் வசித்து வரும் துளசி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் ராஜேஸ்வரி பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்டதும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு ராஜேஸ்வரியின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்களும் ராஜேஸ்வரியின் பெற்றோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இதனையடுத்து 30 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் மிதந்து கொண்டிருந்த ராஜேஸ்வரியின் உடலை மீட்டனர். இதனை கண்டதும் ராஜேஸ்வரியின் பெற்றோர் கதறி அழுதனர். இதனை தொடர்ந்து கைப்பற்றப்பட்ட மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து அவரை கிணற்றில் தூக்கி போட்டனரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |