பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு கிராமத்தில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு மாசிலாமணி என்ற மகனும், கவுரி, நந்தினி என்ற 2 மகள்களும் இருந்துள்ளனர். இதனை அடுத்து கவுரி திண்டிவனம் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் விடுதியில் தங்கி 8 – ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த கவுரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவுரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.