பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வலைசேரிப்பட்டி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு 8- ஆம் வகுப்பு படித்து வந்த அழகேஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அழகேஸ்வரி வீட்டில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அழகேஸ்வரிக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது.
இதனையடுத்து அரை மணி நேரம் கழித்து அழகேஸ்வரி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பனையப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி திருமயம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.