பாலின வேறுபாட்டை எதிர்ப்பதற்காக ஆசிரியர்கள் குட்டை பாவாடை அணிந்து கொண்டு பள்ளிக்கு வந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
வெலோடோலிட் என்ற நகரத்தில் இருக்கும் பள்ளியில் பயின்ற மிக்கேல் கோம்ஸ், என்ற 15 வயது மாணவன், கடந்த நவம்பர் மாதத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் பாலின வேறுபாடு பார்க்கக் கூடாது என்பதற்காக குட்டை பாவாடை அணிந்து கொண்டு பள்ளிக்கு சென்றிருக்கிறார். எனினும் பள்ளி நிர்வாகம், மனநல மருத்துவரை அணுகி சிறுவனை ஆலோசிக்க வைத்தது.
மேலும் பள்ளியிலிருந்தே நீக்கிவிட்டது. இதனைத்தொடர்ந்து, அச்சிறுவன் தனக்கு நேர்ந்ததை டிக் டாக்கில் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவியது. சிறுவனுக்கு ஆதரவும் அதிகரித்தது. மேலும் சிறுவன் பயின்ற பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களும் அச்சிறுவனுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில்தான் அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களே, அச்சிறுவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குட்டை பாவாடை அணிந்து கொண்டு பள்ளிக்கு சென்றிருக்கிறார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் #ClothesHaveNoGender என்ற ஹேஷ் டேக் உலகம் முழுக்க ட்ரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.