Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

பள்ளிகள் திறந்தாச்சு…. வகுப்பு நேரத்தில் மாற்றம் இல்லை…. மறு அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை….!!

புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுச்சேரியிலும் பொதுமக்கள் கூடும் இடங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியது. இதனால் ஜனவரி 4ஆம் தேதி புதுச்சேரியில் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் 1 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பள்ளிகள் இயங்கி வந்தது.

இந்நிலையில் வரும் ஜனவரி 18ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் முழுநேரப் வகுப்புகள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது. ஆனால் தற்போத புதுச்சேரி பள்ளி கல்வி துறை புதிய அறிவிப்பு ஓன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது “பள்ளிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம் இல்லை. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் காலை 9:30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை அரை நாள் மட்டும் வகுப்புகளை நடத்த வேண்டும்” என குறிப்பிட்டிருந்தது.

Categories

Tech |