Categories
உலக செய்திகள்

ஆபாச வீடியோக்களுக்காக விற்கப்படும் சீருடைகள்… தடை விதிக்கக்கோரி மாணவிகள் மனு…!!!

இங்கிலாந்தில் ஆபாச வீடியோக்களுக்காக பள்ளி சீருடைகளை விற்பதை தடை செய்ய  வேண்டும் என்று பள்ளி மாணவிகள் அரசாங்கத்திற்கு மனு அளித்திருக்கிறார்கள்.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் இருக்கும் ஒரு பள்ளியை சேர்ந்த மாணவிகள் ஆயிரக்கணக்கான மக்கள் கையெழுத்திட்ட மனு ஒன்றை அரசாங்கத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள். இது குறித்து ஒரு மாணவி கூறுகையில், அரசு பேருந்தில் பள்ளி சீருடை அணிந்து நாங்கள் சென்றால் எங்களை அவமரியாதையாகவும் பாலியல் ரீதியாகவும் கிண்டல் மற்றும் கேலி செய்கிறார்கள்.

பேருந்து ஓட்டுனரும் நாங்கள் அணிந்திருக்கும் பாவாடையை விரும்புவதாக கூறுகிறார். மக்கள் பள்ளி மாணவிகளை எதற்காக பாலியல் ரீதியாக துன்புறுகிறார்கள்? எங்களை அசௌகரியமாக உணர செய்கிறார்கள்.

இது வியப்பாக உள்ளது என்று கூறியிருக்கிறார். கடந்த 2018 ஆம் வருடத்தில் இணையதளத்தில் நடந்த ஒரு ஆய்வில் 14 வயதில் இருந்து 21 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் பள்ளி சீருடைகளில் இருந்த போது தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தெரியவந்திருக்கிறது.

மேலும், பள்ளி சீருடைக்கு பதிலாக எங்களின் ஆடைகளை அணிந்து வந்த போது இவ்வாறான சீண்டல்கள் குறைவாக இருந்தது என்று மாணவிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் பாலியல் தொந்தரவுகள் தொடர்வதால் ஆபாச வீடியோக்களுக்கு பள்ளி சீருடைகளை விற்க தடை விதிக்க வேண்டும் என்று பள்ளி மாணவிகள் அரசாங்கத்திற்கு மனு அளித்திருக்கிறார்கள்.

இதனை ஆதரித்து சுமார் 13,400 பேர் கையெழுத்துட்டிருக்கிறார்கள். தற்போது, பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்து விட்டதால் அரசாங்கம் நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது. எனவே இந்த மனுவை அரசாங்கம் ஏற்பது தள்ளிப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |