பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரன் என்ற 17 வயது மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகன் காயல்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவசங்கரன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு சென்று கதவை அடைத்து கொண்டார். அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் உள்ளே சென்று பார்த்த போது சிவசங்கரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து சிவசங்கரனை மீட்டு அவரது பெற்றோர் உடனடியாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் வழக்கு செய்த காவல்துறையினர் மாணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.