Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரிகள் திறப்பு – 2 நாட்களில் ..!

கொரோனா பெருந்தொற்று தற்போது குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்க மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன் அடிப்படையில் மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிக்கான திறப்பை அறிவித்து வருகின்றனர். தமிழகத்திலும் கூட வருகின்ற 16 ஆம் தேதி பள்ளி – கல்லூரி திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. பள்ளிகளை பொறுத்தவரை 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் வகுப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி திறக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டதும் அரசியல் கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன. கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை இருக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதால் பள்ளி திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தான் நேற்று பெற்றோர்களிடம் கருத்துக்கணிப்பு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

பள்ளிகளை திறக்கலாமா ? என பெற்றோர்கள் கருத்து கணிப்பு நேற்று முடிந்த நிலையில் இதன் அடிப்படையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பள்ளி – கல்லூரிகள் திறப்பு குறித்து இன்னும் இரண்டு நாளில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகின்றது.

Categories

Tech |