மத்திய மனிதவள நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்ற மத்திய கல்வித் துறைச் செயலாளர், பள்ளிகள் டிசம்பர் வரை திறக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரசின் தீவிரம் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. பல மாநில அரசுகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய கல்வித்துறை செயலாளர் அமித் கரே கலந்துகொண்டார்.
அந்த கூட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வராத நிலையில பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டால் மேலும் தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது. அதனால் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என்று ஆலோசனைக் கூட்டத்தில் அமித் கரே வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.