கனடாவிலுள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தில் 52 பள்ளிகளில் கொரோனா தொற்று பரவுவது கண்டறியப்பட்டிருப்பதால் 702 பள்ளிகள் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனடாவிலுள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தில், கொரோனாவின் 4-ஆம் அலைக்கான தாக்கம் பள்ளிகளில் பரவுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாகாணத்தின் சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில், சுமார் 54 பள்ளிகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அங்கு 10-க்கும் அதிகமான மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதனால், 702 பள்ளிகளுக்கு கொரோனா தொற்று குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.