Categories
காஞ்சிபுரம் சென்னை மாநில செய்திகள்

சீன அதிபர் வருகை : தனியார் பள்ளிகளே முடிவு செய்யலாம்… பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்..!!

சீன அதிபர் வருகையால்  தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இரு நாட்டு தலைவர்கள் நாளை (12 ஆம்தேதி)  மற்றும் 13  ஆகிய இரு தேதிகளில் காஞ்சிபுரம்  மாவட்டம் மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.சீன அதிபர் தமிழகம் வருகையையொட்டி பல்வேறு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளன.

Image result for சீன அதிபர் மோடி

மேலும் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 10,000-த்திற்கு அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்  சீன அதிபர் வருகையையொட்டி  ஓஎம்ஆர் சாலையில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |