Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

அதேபோல, மேற்குவங்க மாநிலத்திலும் ஏப்.30 வரை ஊரடங்கை நீட்டிக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் ஊரடங்கை சில இடங்களில் கடுமையாகவும், சில இடங்களில் தளர்த்தியும் அமல்படுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளார்.  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மோடி ஆலோசனை வழங்கி வருகிறார். இந்த கூட்டத்தில், பல மாநில முதலைவர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், மேற்குவங்க முதல்வரும் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில், ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு மேற்குவங்கத்தில் ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என கூறியுள்ளார். அதேபோல ஊரடங்கு உத்தரவும் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் இன்று 6 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இன்றைய நிலவரப்படி, 95 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Categories

Tech |