அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகமாகி வருவதைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோளுக்கிணங்க சென்னையை சேர்ந்த அரசு பள்ளிகள் மற்றும் தனியர் பள்ளிகளை ஒப்படைக்கவேண்டும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய கல்வி மாவட்டங்களை சார்ந்த பள்ளிகளையும் மே 3ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை மாவட்ட ஆட்சியர் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். கொரோனா பராமரிப்பு பணிகளுக்காக படுக்கை வசதி ஏற்படுத்துவதற்காக இந்த பள்ளிகள் பயன்படுத்தப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னையை பொருத்தவரை கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் கொரோனவள் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை வசதிகள், சிகிச்சைகளுக்காக ஏற்கனவே மருத்துவமனைகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்னும் பிற வசதிகளுக்காகவும், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வரக்கூடியவர்கள் தங்கும் வசதிக்காக இந்த பள்ளிகள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தடுப்பு மற்றும் சுகாதார பணிகளில் ஈடுபடுபவர்கள் பேருந்துகள் மூலமாக அழைத்து வரப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் தங்கினால் அனைவரையும் அழைத்துச் செல்வது மிக எளிதாக இருக்கும். ஓர் இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று சுகாதார பணிகளில் ஈடுபடுவதற்கு வசதியாக இருக்கும் என மாநகராட்சி திட்டமிட்டு தற்போது சென்னை மாவட்டம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை ஒப்படைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.