Categories
மாநில செய்திகள்

9,11 மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு…. வெளியான புதிய தகவல் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு  அமல்படுத்தபட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து ஆங்லினே வழியாக மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் நலன் கருதி இந்த பாடத்தை 40% குறைத்துள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் செயல்படுகிறது. இதையடுத்து பிப்ரவரி மாதத்தில் பள்ளிகள் இயங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதில் பிப்ரவரி 8-ஆம் தேதி 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

கொரோனா பரவலை தவிர்ப்பதற்காக காலை, பிற்பகல் என்று இரண்டு வகைகளாகப் பிரித்து வகுப்புகளை நடத்தலாம்.

மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அவர்களை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிக்கு வர அனுமதிக்கலாம்.

மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் அவசியம்.

பள்ளி வளாகத்திற்கு முன்பாக வரும் போது மாஸ்க் அனைத்து கொண்டு வரவேண்டும்.

9, 1,0 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களின் கூட்டம், ஆய்வகங்களில் கூடுதல், ஆகியவற்றில் இருக்கைகள் குறிப்பிட்ட இடைவெளியில் போடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |