Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 8 முதல்…” பள்ளிகள் திறப்பு”… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ஜனவரி 8ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க ஓடிசா மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜனவரி 8, 2021 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மீண்டும் திறக்கப்படும் அனைத்து பள்ளிகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மாணவர்கள் சனி மற்றும் ஞாயிறு உட்பட 100 நாட்களுக்கு பள்ளிக்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளது. இடைநிலை கல்வி வாரியம் மே 3 முதல் மே 15 வரை உயர்நிலை பள்ளி சான்றிதழ் தேர்வுகளை நடத்தும். மேல்நிலை கல்வி கவுன்சில் மே 15 முதல் ஜூன் 15 வரை 12வது தேர்வுகளை நடத்தும்.

கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பள்ளிகள் மட்டுமே மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோர்கள் பள்ளிகளில் சேர அனுமதிக்க மாட்டார்கள். ஆன்லைன் கற்றல் விருப்பமான மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கப் படும். பெற்றோர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒடிசாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 117 ஆக உள்ளது. இறப்பு எண்ணிக்கை 1,885 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |