நாளை பள்ளிகள் திறப்பையடுத்து வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன்வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. அமைச்சர் செங்கோட்டையன் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று உறுதியாக கூறினார். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளி திறப்பு குறித்து கருத்து கேட்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து பெற்றோர்களின் சம்மதத்துடன் வரும் 19ஆம் தேதி பள்ளிகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் வகுப்பறையை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தொடங்கியுள்ளனர். நாளை மற்றும் நாளை மறுநாள் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் கவுன்சிலிங்க் நடத்தப்படுகிறது.