பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பெற்றோர்களின் சம்மதத்துடன் நாளை தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உள்ளது. இதையடுத்து பள்ளியில் செய்யவேண்டியவை மட்டும் செய்யக்கூடாதவை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
செய்யவேண்டியவை:
1.பள்ளிகளை திறப்பதற்கு முன் 1% சோடியம் ஹைப்போகுளோரைடு கரைசல் பயன்படுத்தி பள்ளி வளாகம், தளவாடப் பொருட்கள், கைப்பிடிகள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் போன்றவற்றை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
2.கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி பயன்பாட்டுக்கு வைத்திருக்க வேண்டும்.
3.பள்ளிகளில் சோப்புகள் வைக்கப்பட்டு கை கழுவும் வசதிகள் செய்யப்பட வேண்டும்.
4.பாடங்களை முடிக்கும் விதமாக பள்ளிகள் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும்.
5.பெற்றோரின் எழுத்துப்பூர்வ சம்மதம் கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவர்.
6.ஒரு வகுப்பில் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தால் ஒரு தொகுதிக்கு 25 மாணவர்களுக்கும் மிகாமல் இருக்கும் வகையில் பிரிக்க வேண்டும்.
7.சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
8.அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும், பணியாளர்களும் பள்ளி வளாகத்தில் உள்ளேயும், வெளியேயும் மாஸ்க் கண்டிப்பாக அணிய வேண்டும்.
9.எல்லா மாணவர்களுக்கும் வைட்டமின் மாத்திரைகள் சுகாதாரத்துறையால் வழங்கப்பட வேண்டும்.
10.பள்ளிகளில் உடல் வெப்ப பரிசோதனை கருவிகள், கிருமி நாசினிகள், சோப்புகள், பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள் ஆகிய பொருட்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
11.கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்க வேண்டும்.
12.பள்ளிக்குள் வருவதற்கும், செல்வதற்கும் வெவ்வேறு பாதைகளை பயன்படுத்த வேண்டும்.
14.மாணவர்களுக்கு வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே இடைவேளை நேரம் வழங்கப்பட வேண்டும்.
செய்யக்கூடாதவை:
1.கொரோனா கட்டுப்பாட்டு அப்பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
2.பள்ளிக்கு மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது. ஏனெனில் அது முழுவதும் பெற்றோரின் சம்மதத்தை சார்ந்து இருக்க வேண்டும்.
3.தனியார் பள்ளி நிர்வாகம் எழுத்துப்பூர்வ இசைவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளித்த பிறகே தனியார் பள்ளிகளை திறக்கலாம்.
4.இறைவணக்க வழிபாடு, விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கலாசார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.
5.நீச்சல் குளங்களை கட்டாயம் மூட வேண்டும். உடற்கல்வி மற்றும் விளையாட்டுகளுக்கான பாட வேளைகள் கிடையாது.
6.நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை நடவடிக்கைகளுக்கு அனுமதி கிடையாது.
7.மாணவர்கள் தங்களுக்கு இடையே உணவை பகிர அனுமதிக்க கூடாது