Categories
கல்வி தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு… இந்த கண்டிஷன் ஃபாலோ பண்ணனும்… மாநில அரசு அதிரடி..!!

டிசம்பர்14ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. ஆன்லைன் மூலமாக மட்டுமே மாணவர்கள் பாடம் பயின்று வந்தனர். இந்நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி 3 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும்.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை பாதுகாப்பு வழிமுறைகளுடன் தினசரி வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளி கல்வி இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 9ம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு உள்ளிட்ட மாணவர்கள், சீனியர் மாணவர்களுக்கு டிசம்பர் 21ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 72 மணி நேரத்திற்கு முன்பாகவே covid-19 பரிசோதனை சான்றிதழையும் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நவம்பர் மாதமே பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு கருதி பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக தமிழக அரசு பள்ளிகள் திறக்கப்படுவதை தள்ளி வைத்துள்ளது. தமிழகத்தில் எந்நேரமும் பள்ளிகள் திறக்க அரசு தயாராக இருப்பதாகவும், பெற்றோர்களின் கருத்துகளுக்கு ஏற்ப பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |