Categories
தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு… அரசு முக்கிய அறிவிப்பு..!!

பள்ளிகள் திறக்கப்பட்டால் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

பொதுத்தேர்வு காரணமாக பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து மத்திய அரசு புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்கள் ஆன்லைனில் கல்வி பயின்று வந்தனர். பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதற்காக மத்திய அரசு புதிய விதிமுறைகளை பள்ளிகளுக்கு வழங்கியுள்ளது.

பள்ளிகள் திறந்த உடன் இழந்த காலத்தை கணக்கில் எடுத்து பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும். மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்ய வேண்டும். வாய்ப்புள்ள பகுதிகளில் நடமாடும் பள்ளிகளை நடத்தலாம். மாணவர்களை சிறு குழுக்களாக பிரித்து பாடம் கற்பிக்கவேண்டும். கற்க முடியாத பாடங்கள் தொடர்பான அறிவைப் பெற மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |